எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கைக்கு 11,000 மெகாவோட் மின்வலு தேவைப்படும்

Sunday, 05 September 2021 - 20:42

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+20+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+11%2C000+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

மின்சார பாவனை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு தசாப்த காலப்பகுதியினுள் இலங்கைக்கு மேலும் 11 ஆயிரம் மெகா வோட் மின்வலு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்படுவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சை வீட்டு வலயமாக சுற்று சுழலை மாற்றுவதுடன், மலிவான  மின் வலுவினை வழங்க சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது சிறந்த பலனை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கைக்கு அமைய 2030 ஆண்டளவில் புதுப்பிக்கப்பட்ட மாற்று மின்சாரத்தை பெறுவதன் மூலம் 70 % தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை இலகுவாக பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.