இயக்குநர் ஷங்காின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார்

Sunday, 05 September 2021 - 21:58

%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவாராட்டம் புலிக்குத்திபாண்டி என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர் முத்தையா, கார்த்தி நடிக்கும் விருமன் படத்தை இயக்குகிறார்.

படத்தின் முதல் பார்வையுடன் படம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியிருந்தது.

சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகும், இப்படத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகிறார்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி என பல நடிகர்கள், நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

2022 ஆம்ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ImageImage