ஆசியாவில் உள்ள தொழிற்சாலைகளின் செயற்பாடுகளில் வீழ்ச்சி

Monday, 06 September 2021 - 8:58

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
ஆசியாவில் உள்ள தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வளர்ச்சி வேகத்தை இழந்துள்ளன.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்காசியாவிலுள்ள பல உலகளாவிய நிறுவனங்கள் குறைந்த விலை உற்பத்தியினை வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் தொழிற்சாலை செயற்பாடுகள் சுருக்கமடைந்துள்ளன.

அத்துடன் பிராந்தியத்தின் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்ததோடு கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாக ஆசிய பொருளாதார நிபுணர் அலெக்ஸ் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.