விலை கட்டுப்பாடுகளால் இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பு - இறக்குமதியாளர்கள் விசனம்

Monday, 06 September 2021 - 16:40

+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
விலை கட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இறக்குமதியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அத்தியாசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் நீண்ட கால விலைக் கட்டுப்பாடுகள் சாத்தியமற்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை நிலையாக பேணுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அத்தியாசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.