ரஷ்யாவின் எரோஃப்ளொட் நிறுவனத்தினால் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்

Tuesday, 07 September 2021 - 8:07

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ரஷ்ய தேசிய வானூர்தி சேவையான எரோஃப்ளொட் (Aeroflot) கொழும்புடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி மொஸ்கோ மற்றும் கொழும்பிற்கு இடையேயான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக எயார்பஸ் ஏ330-300 ரக விமானங்கள் வாரத்தில் இரண்டு சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

அதேவேளை, ரஷ்ய சுற்றுலாத்துறை மற்றும் அது தொடர்பான ரஷ்ய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றினை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதிகளவில் ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.