சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Wednesday, 08 September 2021 - 18:55

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.

இலங்கை புலம்பெயர் பணியாளர்கள், அவர்களது குடும்ப அங்கத்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாட்டில் முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

சுவிட்சர்லாந்து அபிவிருத்தி, ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சுக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 46 இலட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் பிராங் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.