தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

Wednesday, 08 September 2021 - 22:35

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D
நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது 20க்கு 20 போட்டியில், பங்களாதேஷ் அணி, 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

டாக்காவில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 19.3 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 94 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட 20க்கு 20 கிரிக்கட் தொடரை 3 க்கு 1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி, கைப்பற்றியுள்ளது.