நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி

Thursday, 09 September 2021 - 13:14

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani), அந்நாட்டு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தாலிபான்கள், கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் காபுலை கைப்பற்றியதையடுத்து, அப்போது ஜனாதிபதியாக பதவிவகித்த அஷ்ரப் கானி, ஆப்கானிஸ்தானிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வெளியேறினார்.

இந்நிலையில், காபுலில் இருந்து வெளியேறியமை தமது வாழ்வில் மிக கடினமான முடிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தீர்மானத்தை வித்தியாசமாக முடிவுக்கு கொண்டுவர முடியாதிருந்ததாகவும் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

தமது மக்களை கைவிட விரும்பவில்லை என்றும், ஆனால் அதுவே ஒரு வழியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

No description available.