இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Thursday, 09 September 2021 - 13:12

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++20+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இருபதுக்கு  20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிக்குழாம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆலோசகராக, முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக் குழாமில், ரோஹிட் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image