இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 இன்று!

Thursday, 09 September 2021 - 13:30

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+T20+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(09) இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இங்கிலாந்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர் இடம்பெறுகின்றது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றியடைந்துள்ளன.

இந்தநிலையில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.