'அண்ணாத்த' முதல் பார்வை நாளை வெளியாகிறது

Thursday, 09 September 2021 - 16:26

%27%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%27+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும்  படம் ‘அண்ணாத்த’.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் முதல்பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தியன்று காலை 11 மணிக்கு படத்தின் முதல்பார்வையும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இப்படம் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.