காபூல் விமான நிலையத்தில் இருந்து வணிக விமான சேவை ஆரம்பம்

Thursday, 09 September 2021 - 21:52

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் வெளியேறிய 10 நாட்களின் பின்னர் காபூல் விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக வணிக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று 200 பயணிகளுடன் ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து தோஹா நோக்கி இன்று புறப்பட்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இது ஆப்கானிஸ்தானின் வரலாற்று நாள் என கட்டாருக்கான சிறப்பு தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்பினர் வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15ஆம் திகதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையில், தாலிபான்களின் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தானியர்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து சர்வதேச நாடுகளுக்கு செல்வதற்கு முற்பட்டனர்.

இதனால் விமான நிலையத்தில் நெரிசல் நிலை ஏற்பட்ட நிலையில், விமான நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்றைய தினம் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதல் விமானம் இவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.