இந்தியா - இங்கிலாந்து இறுதி டெஸ்ட் இன்று ஆரம்பம்

Friday, 10 September 2021 - 8:11

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(10) ஆரம்பமாகவுள்ளது.

மென்செஸ்டரில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, உள்ளிட்ட சிலருக்கு ஏற்கனவே கொவிட்-19 தொற்று உறுதியாகி இருந்த நிலையில், அணியின் உடற்பயிற்சியாளர் யோகேஷ் பர்மருக்கு (Yogesh Parmar ) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி குழாமினருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கும் இடையே இடம்பெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளை அடுத்து, இறுதிப் போட்டியை நடத்த இணக்கம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.