'அண்ணாத்த' முதல் பார்வை வெளியானது

Friday, 10 September 2021 - 11:06

%27%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%27+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பார்வை இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'அண்ணாத்த' படத்தின் முதல்பார்வை சற்றுமுன் வெளியானதுடன், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது.

இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Image