தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி

Friday, 10 September 2021 - 18:34

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இடம்பெறவில்லை.

இந்நிலையில், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க உள்ளனர்.

இன்றைய போட்டியில் அறிமுக வீரரான மஹீஷ் தீக்ஷன இடம்பெறவுள்ளதுடன், தென் ஆபிரிக்க அணித்தலைவர் கேஷவ் மஹாராஜுக்கு இது அறிமுக இருபது20 போட்டியாக அமையவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.