சீன - அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் உரையாடல்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

Friday, 10 September 2021 - 20:04

+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%3A++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையேயான உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர் சீன ஜனாதிபதியுடன் மேற்கொண்ட இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், உளவு மற்றும் தொற்று நோய் தொடர்பாக மாறுபட்ட கருத்தினை கொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பர போட்டித் தன்மையை கொண்டிருந்த பொழுதிலும், அதனை காரணமாக காட்டி மோதலில் ஈடுபடுவதில்லை என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் குறித்து சீன ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

சீன அமெரிக்காவிற்கு இடையேயான விரிவான மூலோபாய தொடர்பு மற்றும் பரஸ்பர அக்கறையான பிரச்சனைகள், ஆராயப்பட்டமை குறித்து ஊடகங்கள் பாராட்டுதலை தெரிவித்துள்ளன.