தலிபான்களின் செயற்பாடுகளுக்கு ஐ.நா கண்டனம்

Saturday, 11 September 2021 - 7:27

+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
தலிபான்களின் வன்முறை ரீதியான பதிலளிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் காபுலை கைப்பற்றியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெண்களின் உரிமையையும், ஒன்றுகூடும் உரிமையையும் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, தலிபான்களினால் 4 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.