நிலையான விவசாயத்துறை விஷேட செயலணியின் அங்கத்தவர்கள் நியமனம்!

Saturday, 11 September 2021 - 7:33

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
நிலையான விவசாயத்துறை விஷேட செயலணிக்கான அங்கத்தவர்கள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் பி.ஐ யாபா இந்த செயலணியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இம்முறை பெரும்போகத்தின்போது நீர்பாசனத்தின் கீழ் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 35 நாட்களுக்கு நீரை விநியோகிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(10) இடம்பெற்ற நீர் முகாமைத்துவ குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி முதற்தடவையாக சேதன நெற் பயிர்ச்செய்கைக்காக நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.