இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34,973 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Saturday, 11 September 2021 - 11:53

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+34%2C973+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவில் இன்று(11) காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 34,973 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, தொற்று உறுதியானர்களின் மொத்த எண்ணிக்கை 33,174,954 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 260 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை, 442,009 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், 37,681 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 32,342,299 ஆக அதிகரித்துள்ளது.

390,646 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.