அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டு 20 வருடங்கள் நிறைவு

Sunday, 12 September 2021 - 11:00

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+20+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டு 20 வருட பூர்த்தி நிகழ்வு அமெரிக்காவின் பல மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் அரச தலைவர்கள் பலர் பங்கு கொண்டனர்.

குறிப்பாக தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ், முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், பராக் ஒபாமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

20 வருடங்களுக்கு முன்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2,977 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.