ஈராக்கில் விமான நிலையத்துக்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல்

Sunday, 12 September 2021 - 8:24

+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள எர்பில் (Airbill) சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குர்திஸ் கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் விடுத்த இரண்டாவது அறிக்கையில் ஆளில்லா விமான தாக்குதலே நடத்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் ஆறு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எர்பில் விமான நிலையத்திற்கு சேதம் எவையும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.