ஒரு மாத காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி

Sunday, 12 September 2021 - 21:26

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இந்த தொகை இரண்டாவது மாதமாகவும் எட்டப்பட்டுள்ளதுடன், இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அந்த சம்மேளனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன விளக்கமளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மற்றும் அதனை தொடர்ந்து நான்கு மாதங்களிற்கு பின்னர் ஜூலையிலும் இந்த உயர்த்தன்மை பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச வர்த்தக சூழ்நிலைக்கு அமைய இலங்கை ஏற்றுமதியாளர்களினால் செயல்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் தடைகளை போன்று அல்லது இலங்கை ஏற்றுமதியாளர்கள் போட்டித்தன்மையுடன் செயல்பட வேண்டும். 

பயணத்தடை, இறக்குமதி கட்டுப்பாடுகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நாணய மதிப்பிழப்பு போன்றவை தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு பிரதான சவாலாகவுள்ளதாக தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.