ஜோகோவிச்சை தோற்கடித்த மெட்வடேவ் சம்பியனானார்

Monday, 13 September 2021 - 11:18

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடெவ் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடெவ் 6-4,  6-4,  6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார்.