சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஐந்து வருட திட்டம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Monday, 13 September 2021 - 7:53

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95
கொவிட்-19 காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஐந்து வருட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டு சுற்றுலாத்துறை அமைப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் உக்ரைன், ரஷ்யா, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 3,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் சுகாதார வழிமுறைகளின் கீழ், சுற்றுலா பயணிகள் தங்களது செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.