ஆப்கானிய பல்கலைக்கழங்களில் பாலின அடிப்படையில் கற்றல் செயற்பாடுகள் - தலிபான்கள் அமைப்பு

Monday, 13 September 2021 - 8:43

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பாலின அடிப்படையில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முறையும், புதிய இஸ்லாமிய ஆடைக் குறியீடும் அறிமுகப்படுத்தப்படும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அந்த நாட்டில் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும் ஆண்களுடன் இணைந்து கல்வி கற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபான்களின் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி (Baki Haqqani) தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

1996 மற்றும் 2001 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலான தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

புதிய ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளமையை அறிவிக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் தங்களது கொடியைப் தாலிபான்கள் பறக்கவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்கு முன்பு உறுதியளித்த நடைமுறையில் இருந்து இது சற்று மாறுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.