இஸ்லாமாபாத் - காபூலுக்கு இடையிலான விமான சேவையை பாகிஸ்தான் மீள ஆரம்பித்தது

Monday, 13 September 2021 - 17:52

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் இலட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அண்மைய நாட்களில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.

தலிபான்களுடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக பல உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளன.

இந்தநிலையிலேயே, இன்றைய தினம் பாகிஸ்தான் விமானம் காபூல் சென்றிருந்தது. எனினும், அதில் பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் எயார்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

எனினும், இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையே எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.

முன்னதாக கடந்த 4 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.