பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ரமீஸ் ராஜா தெரிவு

Monday, 13 September 2021 - 20:18

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தெரிவான அவர் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக கடமையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி, இவரது பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

இவர், பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான்காவது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.

அதேவேளை, 255 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் சார்பாக  பங்கு கொண்டு 8, 674 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.