இறக்குமதி மீதான செலவீன அதிகரிப்பே வர்த்தக கணக்கின் பற்றாகுறைக்கு காரணம்

Tuesday, 14 September 2021 - 14:36

+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+
ஆண்டின் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறையானது கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தினை காட்டிலும், ஏற்றுமதி வருவாயானது அதிகரித்திருப்பினும், இறக்குமதிகள் மீதான செலவினம் வேகமாக அதிகரித்தமையே 5வது முறையாகவும் இவ்வாறு வர்த்தகப் பற்றாக்குறை பதிவானமைக்கு காரணமாகும் என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்த வேளையில், சுற்றுலாத்துறை வருவாய்கள் குறைந்தளவான மட்டங்களிலேயே காணப்பட்டதாகவும் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.