நடிகை அக்‌ஷரா சிங் மீது காதலன் கொலை முயற்சி

Tuesday, 14 September 2021 - 15:55

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை அக்‌ஷரா சிங், தனது முன்னாள் காதலர் நபர் ஒருவரைக்கொண்டு தன்மீது அசிட் வீச முயன்றதாக ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகையாக வலம் வந்த இவர் ஓடிடி தளத்தில் நடிகர் கரன் ஜோஹார் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் நேர்காணல் ஒன்றை வழங்கிய போது “நான் ஒருவரை காதலித்தேன். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிய முடிவு செய்தேன். இதனால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்தார். என்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் சதி செய்தார். ஒரு கட்டத்தில் எனது முகத்தில் அசிட் வீசி கொலை செய்வதற்காக சிலரை அனுப்பி வைத்தார்.அவர்களிடம் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.