சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளான விளாடிமிர் புட்டின்

Tuesday, 14 September 2021 - 19:33

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

தமது பணிக்குழாமை சேர்ந்தவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, அவர் சுயதனிமைக்கு உட்பட்டுள்ளதாக க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், அந்தப் பயணம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமொமாலி ரக்மனுக்கு, ரஷ்ய ஜனாதிபதி தொலைபேசி மூலம் அறியப்படுத்தியுள்ளதாகவும் க்ரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.