கங்கைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்!

Tuesday, 14 September 2021 - 19:35

++%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
பல மாகாணங்களில் முன்னெடுக்கவுள்ள கங்கைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த வேலைத்திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணிக்க கங்கையை அண்டிய வேலைத்திட்டத்திற்கு 128 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதோடு, அது மொனராகலையை அண்டிய பகுதிகளுக்கான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் தென் மாகாண கங்கைகளுக்கான வேலைத்திட்டத்திற்காக 8 கோடி ரூபாவுக்கும் அதிக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.