தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 646 பேர் கைது

Wednesday, 15 September 2021 - 9:58

+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+646+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணித்தியாலத்தில் 646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திற்குள் நுழைய கூடிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் 2,052 பேரிடம் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அனுமதியின்றி மேல்மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.