நாடு திரும்பினாலும் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் வேண்டும் - இத்தாலி வாழ் இலங்கையர்கள் கோரிக்கை

Wednesday, 15 September 2021 - 7:53

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று(14) இடம்பெற்றது.

பிரதமர் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இத்தாலிக்கும், இலங்கைகும் இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் இலங்கையர்கள் நினைவுகூர்ந்தனர்.

எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு, இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர், அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத்தருமாறு, இத்தாலி வாழ் இலங்கையர்கள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.

குறித்த முன்மொழிவு தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு, அந்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.