சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Wednesday, 15 September 2021 - 10:14

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+8+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
தலைமன்னார்- உருமலை கடற்பகுதியில் சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று(14) நள்ளிரவு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 

அதன்போது  இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்றை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து  9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அதிலிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உருமலை பிரதேசத்தைச் சேர்ந்த 28-37 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.