அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கூற்றை முக்கியமாக கருதவேண்டிய அவசியமில்லை!

Wednesday, 15 September 2021 - 11:06

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கூற்றை நாங்கள் முக்கியமானதாக கருத வேண்டிய அவசியமில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“ஜெனிவா என்பது நாடகமென“ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன், நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

இதேவேளை, அண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அது இழுபறி நிலையில் இருந்தாலும், இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றால் நல்லது தான். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அதனை செய்ய முடியாது போனாலும் மிகவும் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு  தெரியப்படுத்தவேண்டியது முக்கியமானது.

எங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைகளுக்காக நாங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முழுமையான விடயங்களை வழங்கவேண்டும்  எனத் தெரிவித்தார்.

இதிலே நாங்கள் இணைந்து செயல்பட்டால் நல்லது. அடுத்த தடவை இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.