உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் இம்முறை வீழ்ச்சி

Wednesday, 15 September 2021 - 15:48

+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு 2,922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான 6,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

மேற்படி பரீட்சைகளுக்கான பாடசாலை மாணவர்களின் விண்ணங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்றன.

எனினும், ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில்  நடவடிக்கையும் எடுக்காதிருக்க அத்தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.

இதனால், உயர்தரப் பரீட்சைகளுக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.