இலங்கையில் கொவிட் நோயாளர்கள் மத்தியில் கறுப்பு பூஞ்சை நோய்

Wednesday, 15 September 2021 - 13:52

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
இலங்கையில் மீண்டும் கறுப்பு பூஞ்சை நோய் பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.

எனினும், இந்த நோய் கொவிட் நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.  தற்போது கொவிட் நோயாளர்கள் சிலரும் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயாகும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் வைத்திய ஆலோசனை இன்றி மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.