நோர்வே நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை தமிழ் பெண்

Wednesday, 15 September 2021 - 13:44

%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D
இலங்கையில் பிறந்த கம்சாயினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட்டார்.

1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த கம்சாயினி குணரட்னம், தமது மூன்றாவது வயதில் பெற்றோருடன் நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தார்.

பின்னர் ஒஸ்லோவில் குடியுரிமை கிடைத்ததை அடுத்து, 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒஸ்லோ மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதன் முதலாக மாநகரசபை உறுப்பினரானார்.

2015 ஆம் ஆண்டு ஒஸ்லோ மாநகர சபையின் பிரதி முதல்வராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நோர்வே நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்ணாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.