தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

Wednesday, 15 September 2021 - 17:27

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தாமதிக்காமல் நீர்க் கட்டணத்தை செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பாவனையாளர்கள் நீர் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட் பரவல் நிலைமை காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டணங்களை செலுத்துவதற்கான கைப்பேசி செயலி மற்றும் ஒன்லைன் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் நீர் வழங்கல் சபையில் இந்த கட்டணத்தை செலுத்துவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.