T20 துடுப்பாட்ட தரப்படுத்தலில் டேவிட் மாலனுக்கு முதலிடம்

Wednesday, 15 September 2021 - 21:55

T20+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஆடவர் இருபது20 துடுப்பாட்ட தரப்படுத்தல் பட்டியலை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, துடுப்பாட்ட தரப்படுத்தலில் 841 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தினை 819 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் 3ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ஒரு இடம் முன்னேறிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி 4 இடத்தினை பெற்றுள்ளதுடன், நியூஸிலாந்து அணியின் டெவோன் கொன்வே ஒரு இடம் பின்தங்கி 5ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.

அதேநேரம், நான்கு இடங்கள் முன்னேறிய தென்னாப்பிரிக்க அணியின் குயின்டன் டி கொக் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தில் 8வது இடத்தில் உள்ளார்.