T20 பந்துவீச்சு தரப்படுத்தலில் தப்ரைஸ் ஷம்சிக்கு முதலிடம்

Wednesday, 15 September 2021 - 22:22

T20+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஆடவர் இருபது20 பந்துவீச்சுக்கான தரப்படுத்தல் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இருபதுக்கு 20 பந்துவீச்சுக்கான தரப்படுத்தலில் முதல் 7 இடங்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

அதன்படி, முதலாவது இடத்தில் தென் ஆபிரிக்க அணியின் தப்ரைஸ் சம்ஸி முதலிடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், 747 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் ரசிட் கான் பந்துவீச்சு தரப்படுத்தலில் 3ஆம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.