புத்தக விழாவில் இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை என குற்றச்சாட்டு

Thursday, 16 September 2021 - 8:19

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் இந்திய அணியினர் எவரும் முகக்கவசம் அணியாது பங்கேற்றிருந்ததாக அந்த அணியின் முன்னாள் வீரர் திலிப் தோஷி (Dilip-Doshi) குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்துடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்த்திரி உள்ளிட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதனையடுத்து கொரோனா அச்சம் காரணமாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி போட்டி கைவிடப்பட்டிருந்தது

இந்தநிலையில், குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் முகக்கவசம் இன்றி கலந்துக்கொண்டமை பொறுப்பற்ற செயலாகும் என திலிப் தோஷி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் முழுமையான தடுப்பூசியினை பெற்றுள்ளார்கள்.

எனினும் அதிகளவானோர் கூடுவார்கள் என்பதனை கருத்திற்கொண்டு இந்திய அணி வீரர்கள் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.