நேற்றைய தினம் 113,013 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

Thursday, 16 September 2021 - 10:31

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+113%2C013+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9
நாட்டில் நேற்றைய தினம் 113,013 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 41,387 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 66,094பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

1,978 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 480 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

11 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசியும், 2,209 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இதுதவிர 635 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 219 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.