இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 12.3 சதவீதமாக அதிகரிப்பு

Thursday, 16 September 2021 - 14:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+12.3+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது.

எவ்வாறாயினும் கொவிட் பரவலால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்தும் உயர்மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.