மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகளவு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை

Saturday, 18 September 2021 - 9:07

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 71 ஆவது பிறந்த தினமான நேற்றைய நாளில் 2.5 கோடி கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வினாடிக்கு 466 தடுப்பூசிகளும், நிமிடத்திற்கு 28 ஆயிரம் தடுப்பூசிகளும் என ஒரு மணித்தியாலயத்திற்கு 17 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 கோடியைக் கடந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தியதில் சாதனை படைத்த இந்தியாவின் முயற்சியை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.