மதுபானசாலைகளை திறப்பதற்காக எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை - சுகாதார அமைச்சு

Saturday, 18 September 2021 - 19:52

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
மதுபானசாலைகளை திறப்பதற்காக சுகாதார அமைச்சினால் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு எந்த தரப்பிலிருந்தும் அறிவிப்புகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத், மதுபானசாலைகளை இவ்வாறாக திறப்பதன் மூலம், மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளனர்.

அவர்களின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.