கியூபாவின் அப்டலா கொவிட்-19 தடுப்பூசிக்கு வியட்நாம் அனுமதி

Saturday, 18 September 2021 - 21:20

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கியூபாவின் அப்டலா கொவிட்-19 தடுப்பூசிக்கு வியட்நாம் அனுமதியளித்துள்ளது.

வியட்நாமில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அப்டலா கொவிட்-19 தடுப்பூசி உட்பட 8 தடுப்பூசி வகைகளுக்கு வியட்நாம் அனுமதி வழங்கியுள்ளது.

வியட்நாமில் இதுவரையிரல் 6 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் 16 ஆயிரத்து 637 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் வியட்நாமிற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்க தயாராகவுள்ளதாக கியூபா அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் கியூபா அறிவித்துள்ளது.

அப்டலா தடுப்பூசி மூன்றாவது தடவை பரிசோதனையில் 92.28 சதவீத எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.