ஜலாலாபாத்தில் குண்டு வெடிப்பு: இருவர் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்

Saturday, 18 September 2021 - 22:01

%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த பகுதியில் மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருவர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தரப்பினர் முழுமையாக வெளியேறி பின்னர் நடத்தப்பட்ட பாரிய குண்டு தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.