கொவிட் தடுப்பூசி ஏற்றுமதியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா அறிவிப்பு

Monday, 20 September 2021 - 21:13

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

அடுத்த மாதம் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியினை இந்தியாவிலிருந்து மீண்டும் ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மன்தாவியா இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் நன்கொடையாக கிடைத்த தடுப்பூசிகளின் எஞ்சியவற்றையும் இவ்வாறு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயம் குறித்தும் அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக அதிக தடுப்பூசிகளை தயாரிக்கும் இந்தியா, அதிக அளவில் தொற்று ஏற்பட்ட தமது நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதியினை இடைநிறுத்தியது.

இந்திய அரசாங்கம் 94 கோடியே நான்கு லட்சம் மக்களுக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் தடுப்பூசியினை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை 61 சதவீதமான மக்களுக்கு குறைந்தது முதலாம் கட்ட தடுப்பூசியினை வழங்கியுள்ளது.

நாளை வொஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் தடுப்பூசி ஏற்றுமதியினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் போது முன்னுரிமை அண்டைய நாடுகளுக்கு வழங்கப்படும் என இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அடுத்த மாதம் 30 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியா இதுவரை சுமார் 100 நாடுகளுக்கு 6 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை அன்பளிப்பு மற்றும் விற்பனை செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.