கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி

Tuesday, 21 September 2021 - 14:29

%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றுள்ளார்.

கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.

ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கனசர்வேட்டிவ் கட்சி 103 இடங்களிலும் பிளாக் கியூபெகோயிஸ் 28 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி 22 இடங்களிலும் முன்னிலை பெற்றன.

இதனடிப்படையில், நாடாளுமன்றில் அதிகபடியான ஆசனங்களை கைப்பற்றியுள்ள போதிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெறத் தவறியுள்ளது.